கோரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் பெண் ஒருவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை!

கோரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

கோரோனா வைரஸ் தொற்றுக்கான பெரியளவு நோய்தாக்கங்கள் இல்லை அவருக்கு இல்லை எனவும் அவருடைய குருதி மாதிரி சோதனை பின்னரே அவருக்கு ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்று தொடர்பில் தெரிவிக்க முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி. ஜமுனாநந்தா தெரிவித்தார்.

“அத்துடன் இது தொடர்பில் மக்கள் பீதியடைய தேவையில்லை. குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எனினும் இது தொடர்பில் நாங்கள் அவருக்கு முழுமையான சிகிச்சை அளித்து வருகின்றோம்.

அந்தப் பெண் தனிமைப்படுத்தப்பட்ட விடுதி ஒன்றில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்” என்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

Related Posts