கோரோனா பாதித்தோர் எண்ணிக்கை 43ஆக உயர்வு; இன்று மட்டும் 15 பேர் அடையாளம்

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 9 பேர் இன்று (மார்ச் 17) செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண்ணுடன் 44 பேர்) அதிகரித்துள்ளது.

அத்துடன், இன்று மார்ச் 17 செவ்வாய்க்கிழமை மட்டும் 15 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கோரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 204 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்படுகின்றனர்.

அத்துடன், மட்டக்களப்பு, வவுனியா உள்ளிட்ட 14 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 2 ஆயிரத்து 258 பேர் தங்கவைத்து கண்காணிக்கப்படுகின்றனர்.

இதேவேளை, மார்ச் முதலாம் திகதியிலிருந்து 9ஆம் திகதிவரை வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தோர் சுமார் 300 பேர் நாடுமுழுவதும் தங்கியுள்ளனர். அவர்கள் தொடர்பில் பொலிஸ் பதிவுகள் இடம்பெறுகின்றன என்று இராணுவத் தளபதி தெரிவித்தார்.

Related Posts