கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 152ஆக உயர்வு

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் மேலும் ஒருவர் இன்று (ஏப்ரல் 3) வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 152ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.

அவர்களில் 24 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

124 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் அதிதீவிர சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

பலாலி, கொடிகாமம் உள்பட நாடுமுழுவதுமுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் 250 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Related Posts