கோரோனா தொடர்பில் விழிப்பாயிருங்கள்; அச்சமடைய வேண்டாம் – வடமாகாண சுகாதாரத் திணைக்களம்

நாட்டில் கோரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு மீளத் திரும்புவதற்கு வரும் மே 11ஆம் திகதி வழமை நிலைக்குக் கொண்டுவரும் நிலையில் பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டியவை தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

உலகையே அச்சுறுத்திவரும் கோரோனா வைரஸ் நோயானது தற்போது எமது நாட்டிலும் வேகமாக பரவி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

கோரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள பின்வரும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

  1. இயலுமானவரை பொது இடங்களுக்கு செல்வதையும் அவசியமின்றி மக்கள் கூடுமிடங்களுக்கு சென்று வருவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
  2. அத்தியாவசிய பொருள்கள் கொள்வனவிற்கு அல்லது வேறு அவசிய தேவைகளுக்காக வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் வெளியே செல்லுங்கள்.
  3. நீண்ட கால நோயாளிகள், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் கோரோனா வைரஸினால் இலகுவில் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதால் இவ்வாறானவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை கூடியவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
  4. எப்போதும் நீங்கள் மற்றவர்களிலிருந்து ஆகக்குறைந்தது 3 அடி தூரத்திலிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வீட்டிற்கு திரும்பியதும் சவர்க்காரமிட்டு கைகளை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.
  5. நீங்கள் வெளியே செல்லும் போது எப்போதும் சரியான முறையில் முகக்கவசங்களை அணிந்து கொள்வது கோரோனா தொற்றிலிருந்து உங்களை பாதுகாக்கும்.

கோரோனா தொடர்பில் விழிப்பாயிருங்கள். அச்சமடைய வேண்டாம்
தகவல்: சுகாதாரத் திணைக்களம்

Related Posts