கோயில் காணிகள் குறித்து பதிவினை மேற்கொள்க

‘பிம்சவிய’ வேலைத்திட்டத்தின் கீழ் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் காணப்படும் கோயில் காணிகளை பதிவுசெய்யுமாறு நிர்ணயத் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் க.பார்த்தீபன் அறிவித்துள்ளார்.

இதன்படி கோயில் காணி உரிமையாளர்கள் அல்லது நிர்வாக சபையினர் குறித்த பிரதேச கிராம அலுவலகர் ஊடாக பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீதிமன்ற வழக்கு மூலம் தீர்க்கப்பட்ட காணிகள் இருப்பின் குறித்த தீர்ப்பின் நிழற்படப் பிரதிகளையும் இணைத்து பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts