கோயில்களுக்கு சூரிய ஒளியில் இருந்து மின்சாரம்

மின் சிக்கனத்தின் ஒரு கட்டமாக, தமிழகத்தில் உள்ள மிகவும் முக்கியமான 4 ஆயிரம் கோயில்களுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறும் திட்டத்தை செயல்படுத்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது.

temble-solor

தமிழகத்தில் நாளுக்கு நாள் மின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், தேவைக்கேற்ப மின் உற்பத்தி இல்லாததால் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டினால் சாதாரண மனிதர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. கோயில்களும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், மின்சார சிக்கனத்தை வலியுறுத்தும் வகையிலும், கோயில்களில் மின்வெட்டை தவிர்க்கும் வகையிலும் சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.அதற்காக, முக்கிய கோயில்கள் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள மண்டபங்களில் சூரிய ஒளி உதவியுடன் மின்சக்தி பெற இந்து அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

Related Posts