கோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை – எந்தவொரு வங்கி அட்டையையும் பயன்படுத்தி பணம் மீளப்பெற முடியும்

கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் நாளை நடமாடு வங்கிச் சேவையை நடத்த உள்ளதாக தேசிய சேமிப்பு வங்கியின் கோப்பாய் கிளை அறிவித்துள்ளது.

ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் வங்கிகளுக்குச் சென்று பணத்தை மீளப்பெற முடியாதவர்களுக்கு வசதியாக இந்த நடமாடும் பணம் மீளப்பெறும் சேவையை வழங்கப்படவுள்ளது என்று தேசிய சேமிப்பு வங்கியின் கோப்பாய் கிளையின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைக் கருத்திற் கொண்டு தேசிய சேமிப்பு வங்கியின் கோப்பாய் கிளை உத்தியோகத்தர்கள், மக்களின் நன்மை கருதி தன்னியக்க இயந்திரம் ஊடான நடமாடும் வங்கிச் சேவையை நாளை ஏப்ரல் 4ஆம் திகதி சனிக்கிழமை பருத்தித்துறை வீதி ஊடாக இருபாலை, கோப்பாய், நீர்வேலி, புத்தூர் மற்றும் கைதடி ஆகிய பகுதிகளுக்கு வருகை தருவார்கள்.

எந்தவொரு வங்கி அட்டையையும் பயன்படுத்தி நன்மை பெற முடியும் என்பதை அறியத்தருகின்றோம் – என்றுள்ளது.

Related Posts