கோப்பாய் பிரதேசத்தில் பொலிஸார் இருவர் மீது கூறிய ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று தீவிரவாத விசாரணைப் பிரிவினர் (TID) மூலம் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வல்வெட்டித்துறை, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இருவரே மேற்படி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.