கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக அழைத்து ஈ.பி.டி.பி தேர்தல் பிரச்சாரம்

EPDP flagகோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக பஸ்களில் ஏற்றி தேர்தல் கூட்டத்திற்கு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் அரங்கேற்றப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களை நேற்று மதியத்துடன் வகுப்புக்களை முடித்து கொண்டு தேர்தல் கூட்டத்திற்கு வருமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ஈ.பி.டி.பி வேட்பாளர்கள் இருவரினால் அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும் அதற்கு இணக்கம் தெரிவிக்காதவர்கள் வலுக்கட்டாயமாக பஸ்களில் அழைத்துவரப்பட்டு நீர்வேலியில் உள்ள நீர்வேலியிலுள்ள நெசவு சாலையில் வைத்து தங்களுக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்ததுடன் தேர்தல் பிரசாரத்தினையும் மேற்கொண்டுள்ளனர்.

Related Posts