கோப்பாயில் இரு நாட்களில் 50 பேர் கைது!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய குற்றச்சாட்டில் கடந்த இரு நாட்களில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடியமை மற்றும் வியாபார நடவடிக்கைகளில் உரிய அனுமதியின்றி ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களில் குறித்த 50 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், கைதுசெய்யப்பட்டவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், கைதானவர்கள் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அதன் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் தேவையற்று வெளியில் திரிபவர்கள் குறித்து பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts