கோபிநாத் முண்டே மரணம் தொடர்பில் விசாரணை செய்ய சி.பி.ஐ?

மத்திய அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே சாலை விபத்தில் மரணமடைந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே, கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார். ஆனால் சதியால் இந்த விபத்து நடந்துள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

10-bjp-leaders-meet-rajnath-singh-on-munde-death-600

கோபிநாத் முண்டே மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என மகாராஷ்டிரா மாநில பாரதிய ஜனதா தலைவர் தேவேந்திர பத்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இந்திய குடியரசு கட்சித்தலைவர் அத்வாலே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் கோரினர். இதுதொடர்பாக சரத்பவார், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். இந்த நிலையில் டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை இன்று மகாராஷ்டிரா பாஜக தலைவர் தேவேந்திர பத்னாவிஸ் நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தினார். அவருடன் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியுடன் உடன் சென்றார். இதைத் தொடர்ந்து கோபிநாத் முண்டே மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.,

Related Posts