கோபிநாத் முண்டே உயிரிழந்தது ஏன்? – பிரேத பரிசோதனையில் தகவல்

டெல்லி விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கோபிநாத் முண்டேவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், கார் மோதியதால் அவரின் கழுத்து எலும்பு உடைந்து, கல்லீரல் சிதைந்து சுமார் ஒன்றரை லிட்டர் அளவிற்கு ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

gobinath-moondey

டெல்லி விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு செல்ல புறப்பட்ட மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கோபிநாத் முண்டே சாலை விபத்தில் சிக்கினார்.

டெல்லி விமான நிலையம் அருகே மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கோபிநாத் முண்டே கார் மீது எதிரே வந்த வாகனம் மோதியது. இதில் காயம் அடைந்த அமைச்சர் கோபிநாத் முண்டே, எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், கோபிநாத் முண்டேவின் பிரேத பரிசோதனையில், கார் மோதியதால் அவரின் கழுத்து எலும்பு உடைந்து, கல்லீரல் சிதைந்து சுமார் ஒன்றரை லிட்டர் அளவிற்கு ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும், கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மூளை மற்றும் நுரையீரலுக்கு ஆக்சிஜன் பகிர்வு இல்லாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் அமித் குப்தா, விபத்திற்கு பிறகு கோபிநாத் முண்டேவை மருத்துவமனைக்கு அழைத்து வந்தப்போது அவரது நாடி துடிப்பு, இதயத்துடிப்பு இயங்கவில்லை. அவரது மூக்கில் சிறிய காயங்கள் ஏற்பட்டிருந்தது. கல்லீரல் சிதைவு, கழுத்து எலும்பு முறிவு போன்ற உள்காயத்தினால்தான் அவர் உயிரிழந்துள்ளார் என கூறியுள்ளார்.

இந்நிலையில், மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சரான கோபிநாத் முண்டேவின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான பரலியில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts