கோத்தாவின் தூது பரிசீலிக்கப்படுகிறது- முதலமைச்சர்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவால் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருவதாக தெரியவருகிறது.

இது குறித்து கருத்து வெளியிட்ட வடக்கு முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன் பாதுகாப்பு செயலாளரது அழைப்பு கட்சித் தலைமையின் கலந்தாலோசனையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஊடாக தூது அனுப்பியிருந்தார்.

கொழும்பு அரசுக்கும் வடக்கு மாகாண சபைக்கும் இடையிலான கருத்தியல் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு அரச தரப்பின் சார்பில் தாம் பேசுவதற்கு தயார் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டிருந்தார்.

இவ்சந்திப்புக்காக யாழ்ப்பாணம் வரவும் தயாராக உள்ளதாக மனோகணேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Posts