கோத்தபாயவை காப்பாற்றும் வகையில் நான் முட்டாள் இல்லை: ஜனாதிபதி

கோத்தபாயவை காப்பாற்றும் வகையில் எனது உரை அமைந்திருக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பொன்றின் போது ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது பிரதமர் ரணில் உட்பட ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்களும் அங்கிருந்துள்ளனர்.

இதன்போது சமகால நெருக்கடியாக மாறியுள்ள ஜனாதிபதியின் உரை தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டார்.

இந்த கலந்துரையாடலின் போது ஜனாதிபதி, எனது உரையை யாரும் சரியாக கேட்கவில்லை. கோத்தபாயவை காப்பாற்றும் வகையில் நான் கூறவில்லை. நான் அப்படி கூறும் அளவிற்கு முட்டாள் இல்லை… இராணுவ தளபதிகள் மூவரை நீதிமன்றத்திற்கு அழைத்து அந்த புகைப்படங்களை ஊடகங்களில் பிரசுரித்து அவர்களுக்கு நன்மையை பெற்றுக் கொள்கின்றமை குறித்தே கூறினேன். பிணை பெற்று விடுதலையாகியதும் இராணுவத்தினரை பழி வாங்குவதாக கூறுவதன் ஊடாக தங்களுக்கு சாதகமாக ஒரு சூழலை ஏற்படுத்திக் கொள்வார்கள். நான் அதனையே கூறினேன்.

நான் கோத்தபாயவின் பெரையேனும் கூறவில்லை. எனது உரையின் இறுதி பகுதியை யாரும் சரியாக கேட்கவில்லை. இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாதென நான் கூறினேன். இது வலுவான அரசாங்கம் என கூறினேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்டிருந்த கருத்து மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலைமை, அது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

இந்த குழுவில் பிரதமருடன் ஐக்கிய தேசிய கட்சி பொது செயலாளர் கபீர் ஹசீம், மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, அகில விராஜ் காரியவசம், மற்றும் ரவிந்திர சமரவீர ஆகிய உறுப்பினர் கலந்துக் கொண்டிருந்த நிலையில் அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் அங்கு வருகைத்தந்திருந்தார்.

வந்தவர்களை அன்புடன் வரவேற்ற ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி ”ராஜபக்சர்களை பாதுகாக்கப்போவதில்லை.. ராஜபக்சர்களுக்கு எதிராக உள்ள விசாரணைகளை நான் ஒரு போது நிறுத்தப்போவதில்லை”.. என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

Related Posts