தான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். பொதுத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக வௌியான தகவல் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன் மக்களுக்கு சேவை செய்ய பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவி அத்தியவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பிரஜாவுரிமை உள்ளமையால் தான் தேர்தலில் போட்டியிடவில்லையா என இதன்போது எமது செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதனால் எந்த சிக்கலும் இல்லை என கூறிய கோட்டாபய, தனது அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கத் தேவையான ஆவணங்களை தற்போது தூதுவராலயத்தில் கையளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை பஷில் ராஜபக்ஷ பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும், சமல் ராஜபக்ஷ போட்டியிடப் போவதில்லை எனவும் தெரியவந்துள்ளது