பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் இன்று முதல் (18) கோதுமை மாவின் விலையைக் குறைக்க தீர்மானித்துள்ளன.
இதற்கமைவாக, ஒரு கிலோ பிரீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலைகள் 10 ரூபாவால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவுக் குறைப்புத் திட்டத்திற்கு அமைவாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.