கோதுமை மாவின் விலையினை மேலும் 50 ரூபாயினால் அதிகரிக்க நடவடிக்கை!

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையினை மேலும் 50 ரூபாயினால் அதிகரிப்பதற்கு கோதுமை மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன, தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மா 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதன் விலை மேலும் 50 ரூபாவினால் அதிகரிக்கப்படுமாயின் மாவின் விலை 200 ரூபாயைவிட உயரும் என்பதுடன், தமது தொழிற்துறையினர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியேற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts