கோதபாயவை ஜனாதிபதி ஆக்குவேன் என்கிறார் சுப்ரமணியம் சுவாமி

2020 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது வரலாற்றை மாற்றக் கூடிய தேர்தலாக அமையும் என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோதபாய ராஜபக்ஸவை 2020 இல் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் பெறப்படும் வெற்றியே இதற்கான காரணமாக அமையும் எனவும் அவர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த தேர்தலின் போது, இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு கோதபாய ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட வேண்டுமென தான் இந்திய அரசாங்கத்தை கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts