கோண்டாவிலில் வீடு புகுந்து வாள்வெட்டுக் கும்பல் அடாவடி!!

கோண்டாவில் அன்னங்கை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கியதுடன் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியையும் அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளது.

கோண்டாவில் உடும்பிராய் மேற்கு வீட்டிற்குள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பலே வன்முறையில் ஈடுபட்டது.
கும்பலைச் சேர்ந்த நால்வரும் தமது முகங்களை மூடிக்கட்டி இருந்தார்கள் என வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

வீட்டினுள் புகுந்து வன்முறை கும்பல் அடவாடியில் ஈடுபட்டிருந்த வேளை, அங்கு இருந்தவர்கள் அவல குரல் எழுப்பிய போது அவர்களை வாளினை காட்டி மிரட்டியதாகவும் , அவல குரல் கேட்டு உதவிக்கு வந்த அயலவர்களையும் வாள்களை காட்டி மிரட்டிவிட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts