‛கோணலா இருந்தாலும் என்னோடது’

தலைப்பை படித்து விட்டு முகம் சுழிக்கத் தோணுதா?

சத்தியமா இது ஒரு படத்தோட தலைப்புதான். தலைப்பு பற்றி இயக்குனர் ந.கிருஷ்ணகுமாரின் விளக்கம் இது…

konala-erunthalum-athu-ennodathu

“சிலர் யாருடைய பேச்சையும் கேட்காமல் முடிவு எடுப்பார்கள். அந்த முடிவுகள் தவறாக இருந்தாலும் எடுத்த முடிவு என்னோடது என்று உறுதியாக இருப்பார்கள். நான் எடுத்து முடிவு கோணலா இருந்தாலும் அது என்னோடது. இந்த அர்தத்தில்தான் தலைப்பு வைத்திருக்கிறோம்” என்கிறார்.

ஒரு தாத்தாவிடம் பெரும் சொத்து இருக்கிறது. அதை தனது பேரன்களுக்கு சரிசமமாக பிரித்து கொடுக்க முடிவு செய்கிறார். அவரது குடும்பத்துக்கு வந்த மருமகள்களால் பல பிரச்சினைகள் ஏற்பட்டு குடும்பம் சிதைந்து விட்டதால் பேரன்கள் மூவரும், மூன்று உடன் பிறந்த சகோதரிகளை திருமணம் செய்து கொண்டு வந்தால் சொத்தை பிரித்து தருவதாக சொல்கிறார். மூன்று பேரன்களும் மூன்று சகோதரிகளை தேடிச் செல்லும்போது நடக்கிற சுவாரஸ்யமான சம்பவங்களை காமெடியாக சொல்கிற படம். மூன்று பேருக்கும் மனைவிகள் கிடைத்தார்களா? தாத்தாவின் சொத்து பேரனுக்கு கிடைத்ததா என்பது படத்தின் முடிவு.

கிரிஷிக், மேகாஸ்ரீ, மணாலி ரத்தோட் என்ற புதுமுகங்களுடன் டெல்லி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், அபிநவ், சைந்தவி உள்பட பலர் நடித்துள்ளனர். வல்லவன் இசை அமைத்துள்ளார், மா.பெ.ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் அடுத்த மாதம் வெளிவருகிறது.

Related Posts