கோட்டாவிற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் படைத்தளபதிகள் யாழில் களமிறக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக, முன்னாள் படைத்தளபதிகள் யாழ்ப்பாணத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலராக இருந்த காலகட்டத்தில், இறுதிக்கட்டப் போரின்போதும் போருக்குப் பின்னரான காலகட்டத்திலும் அவருடன் இணைந்து பணியாற்றிய, யாழ்ப்பாணத்தில் கட்டளைத் தளபதிகளாக இருந்த, இரண்டு மேஜர் ஜெனரல்களே இவ்வாறு தேர்தல் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர்.

மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோரே யாழ்.குடாநாட்டில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளனர்.

இவர்கள் இருவரும் 2005ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 7 ஆண்டுகள் யாழ். படைகளின் தலைமைய கட்டளை அதிகாரிகளாக செயற்பட்டவர்களாவர்.

அத்துடன் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அதற்குப் பின்னர் 2015 ஆட்சி மாற்றம் வரை வடக்கு மாகாண ஆளுநராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts