கோட்டபயவின் கீழ் மூன்று ஆயுதக் குழுக்கள் வெள்ளைவான் கடத்தலை மேற்கொண்டது

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தமக்குக் கீழ் மூன்று ஆயுதக் குழுக்களை செயற்படுத்தி வெள்ளைவான் கடத்தலை மேற்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேற்படி மூன்று குழுக்களும் கடத்தல் தொடர்பான செயற்பாட்டினை பகுதி பகுதியாக திட்டமிட்டு மேற்கொண்டுள்ளன. குறிப்பாக இந்த மூன்று குழுக்களில் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மானின் குழுவும் ஒன்றென கூறப்படுகிறது. அதாவது கடத்திச் செல்லப்பட்டு கொலைசெய்யப்படுபவர்களது சடலங்களை மறைக்கும் நடவடிக்கையை கருணா குழு செய்துவந்ததாக குறிப்பிடப்படுகிறது.

ஏனைய குழுக்களில் சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட்டு, இச்செயற்பாட்டை கோட்டா கச்சிதமாக சாட்சிகள் இன்றி நிறைவேற்றியதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன.

ஏற்கனவே கோட்டா கடற்படையினரின் உதவியுடன் கடத்தல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்துடன், பிரகீத் உள்ளிட்டோர் கடத்தப்பட்டு அவர்கள் கோட்டாவின் ஆலோசனையின் பேரிலேயே இராணுவ முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் கொலைசெய்யப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மொத்தத்தில் கடந்த காலத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை போன்ற விடயங்கள் ஒரே அமைப்பினரைச் சேர்ந்தவர்கள் ஒரே காரணத்திற்காக மேற்கொண்டுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது.

தற்போது ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஏனைய கொலை தொடர்பிலான சந்தேகநபர்களும் கைதுசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
– See more at: http://athavansrilanka.com/?post_type=post&p=281132#sthash.uTBAbOS9.dpuf

Related Posts