கோச்சடையான் படத்துக்காக ஆஸ்கர் விருதுக்கு ஏ.ஆர்.ரகுமான் பரிந்துரை

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான ‘ஸ்லம் டாக் மில்லினியர்’ படத்திற்காக சிறந்த சவுண்ட் ட்ராக் மற்றும் ‘ஜெய் ஹோ’ பாடலுக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றார். இதையடுத்து, 2010-ஆம் ஆண்டு ‘128 ஹவர்ஸ்’ என்ற படத்துக்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
ar-rahman

இந்நிலையில், இந்த வருடம் மீண்டும் ஆஸ்கர் விருதுக்கு ஏ.ஆர்.ரகுமான் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். தமிழில் வெளியான ‘கோச்சடையான்’ மற்றும் மில்லியன் டாலர் ஆர்ம், தி 100 புட் ஜர்னி ஆகிய படங்களின் இசைக்காக அவருக்கு ஆஸ்கர் விருது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதில், ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். மோஷன் கேப்சர்ஸ் தொழில்நுட்பத்தில் வெளிவந்த இப்படத்தை ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts