‘கோச்சடையான்’ படக்குழுவுக்கு விருந்து கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

ரஜினி நடிப்பில், அவரது இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில், சமீபத்தில் வெளிவந்த படம் கோச்சடையான். இந்தியாவிலேயே முதன்முறையாக மோஷன் கேப்ட்சரிங் தொழில்நுட்பத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. கடந்த மே 23-ம் தேதி உலகெங்கும் ரிலீஸான கோச்சடையான் படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் வந்துள்ளன.

rahman-kochchadayan-team

இந்நிலையில், கோச்சடையான் வெற்றியை சென்னையில் விருந்து வைத்து கொண்டாடியுள்ளார் இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த விருந்தில், ஏ.ஆர்.ரஹ்மான், செளந்தர்யா ரஜினிகாந்த், கோச்சடையான் படத்தின் மேற்பார்வையாளர் இயக்குநர் மாதேஷ், ரஹ்மானின் சகோதரி ரஹானா மற்றும் இப்படத்தில் பணியாற்றி கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கொண்டனர். ரஜினி மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் லிங்கா படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அவர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.

Related Posts