கட்சி எல்லைகளிற்கப்பால் பெண்போராளியென்ற வகையிலும் தனது இரண்டு சகோதரர்களையும் மாவீரர்களாக மண்ணிற்கு கொடுத்த சகோதரியென்ற வகையிலும் கோகிலவாணிக்கு தனது ஆதரவையும் வரவேற்பினையும் வடமாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறு வடமாகாணசபை உறுப்பினரான அனந்தியால் ஜெனீவர் வரை சென்று உரையாற்ற முடிந்ததோ அதே போன்று கோகுலவாணியாலும் முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
இணையத்தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியினில் இது பற்றி அவர் தெரிவிக்கையினில் இறுதி யுத்தம் வரை நின்றிருந்தவர்களுள் கோகிலவாணியும் ஒருவர்.தமிழ் தேசிய நிலைப்பாட்டிலுள்ள அனைவரையும் ஆதரிக்கவேண்டியது சமூக கடமை.அவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலோ,கூட்டமைப்பிலோ அல்லது ஜனநாயக போராளிகள் அணியாகவோ எவ்வாறிருந்தாலும் நிலைப்பாடு முக்கியமானது.
முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாக நெருக்குவாரங்களை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ள நிலையினில் அவர்கள் பொதுவெளியினில் வருவதே பாதுகாப்பானதாக இருக்குமெனவும் அவர் தெரிவித்தார்.