கொஸ்லாந்த மீரியபெத்த பிரதேசத்திற்கு பொதுமக்கள் செல்லதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரதேசத்தில் இடம்பெற்ற அனர்த்தத்தை பார்வையிடுவதற்கு அதிகளவான மக்கள் வாகனங்களில் செல்வதாகவும் அந்த வாகனங்களை மீண்டும் திருப்பியனுப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த பிரதேசத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அங்கு செல்வதை தவிர்த்து கொள்ளுமாறு பொதுமக்களை அறிவுறுத்துவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.