கொழும்பு பேருந்து நிலைய துப்பாக்கி சூடு!!

புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையிலுள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் சிசிடிவி காட்சிகள் வௌியாகியுள்ளன.

இன்று (30) காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மற்றுமொருவர் மேலதிக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts