கொழும்பு பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கியிருந்த வைத்திய பீட மாணவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர் தற்கொலை செய்திருக்கலாம் என கருவாத்தோட்ட பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
28 வயதான அந்த வைத்தியரின் சடலம் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உயிரிழந்த மாணவன் பரீட்சையில் தோல்வியடைந்தமையால் ஏற்பட்ட மன உளைச்சலினாலேயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.