ஜனாதிபதி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட நிலத்தடி மாளிகை, கொழும்பு துறைமுகத்துடன் தொடர்பு கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்துடன் இந்த நிலத்தடி இல்லத்தை தொடர்புப்படுத்தும் பணிகள் அரைவாசி வரை முடிவுற்றுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றிய ஒருவரின் தகவல்படி குறித்த நிலத்தடி மாளிகைக்கு இரண்டு தடவைகள் மாத்திரமே தாம் சென்று வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் குறித்த மாளிகை நாமல் மற்றும் யோசித உட்பட்ட ரக்பி நண்பர்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெரும்பாலும் அலரி மாளிகையிலேயே வசித்து வந்தார். இந்தநிலையில் அவர் ஏன் இந்த நிலக்கீழ் நிர்மாணத்தை ஜனாதிபதி இல்லத்தில் அமைக்கவேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலக்கீழ் நிர்மாணப்பணிகள் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் மாலை வேளையிலேயே இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.