கொழும்புத்துறையில் வெடிமருந்துகள் மீட்பு!!

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் இருந்து 25 ஜெலட் நைட் குச்சிகள் புதன்கிழமை (19) மீட்கப்பட்டுள்ளன.

ஊர்காவற்துறை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்கரைக்கு அண்மையாக இருந்த பற்றைக்காடு ஒன்றினுள் அவை மீட்கப்பட்டுள்ளன.

கடற்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் அவை மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைக்காக அவை கடற்படை முகாமுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

Related Posts