யாழ். கொழும்புதுறை உதயபுரம் பகுதி கடற்பரப்பில் கைக்குண்டுகள் நேற்றயதினம் காலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ். குற்றத்தடுப்பு பொலிஸார் இக்கைகுண்டுகளை மீட்டுள்ளனர்.
யாழ். கொழும்புத்துறை உதயபுரம் கடற்கரைபகுதியில் இருந்து 100 மீற்றர் தொலைவில் பாவிக்க முடியாத பழைய டோபிடோ வகை கைக்குண்டுகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.