கொழும்பில் நேற்று இரவு முதல் மீண்டும் பெய்துவரும் கடும் மழை காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
24 மணிநேரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்பதால் மண் சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
ஜின் கங்கை, அத்தலகன ஓயா மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் அதனை அண்டியுள்ள மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இரவு பெய்த மழை காரணமாக தும்முல்லை வீதி இன்று காலை நீரில் முழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக கொழும்பின் பல வீதிகளில் நீர் தேங்கியுள்ளதுடன் வீதிப்போக்குவரத்துக்கள் பாதிப்படைந்துள்ளன.
மழை மற்றும் கடுமையான காற்றும் வீசமென்பதனால் மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.