கொழும்பில் காலிமுகத் திடலிலும், கோட்டை உலக வர்த்தக மையம் பகுதியிலும் மணலுடன் கூடிய மழை பெய்ததாகத் தெரியவருகிறது.
மழை நீருடன் மணலும் கலந்திருந்ததால், மழையில் நனைந்தவர்கள் அசௌகரியங்களுக்கு உட்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, அப்பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மணல் படிந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.