கொழும்பில் ஒன்று திரண்டு அதிபர்கள் போராட்டம்

அதிபர் சேவையின் முரண்பாடுகளின் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நேற்று 21.09.2016 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய சுமார் 500 வரையான அதிபர்கள் ஜனாதிபதி அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

2

1

இதன்போது பொலிஸார் லோட்டஸ் வீதியில் வைத்து ஊர்வலத்தை வழிமறித்தனர். இதன்போது ஏற்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து – தொழிற்சங்க உறுப்பினர்கள் ஐவரை பொலிஸார் தமது வாகனத்தில் ஜனாதிபதி காரியாலத்துக்கு ஏற்றிச்சென்றனர்.

இங்கு வைத்து ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சுனந்த காரியப்பெருமவுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதன்போது – இலங்கையின் சகல அதிபர்சேவைகளிலுமுள்ள அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தொழிற்சங்க உறுப்பினர்களால் தெளிவுபடுத்தப்பட்டதுடன் – எழுத்துமூல ஆவணமும் வழங்கப்பட்டது.

அதிபர்களின் பிரச்சினைகளின் நியாயப்பாட்டை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதுடன் – மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக நாளை அறிவிப்பதாகவும் – விரைவில் கல்வி அமைச்சருடனான பேச்சுவார்த்தையை ஏற்படுத்தி இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயல்வதாகவும் மேலதிக செயலாளர் உறுதியளித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Related Posts