கொழும்பிலுள்ள பெண்கள் பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பெண்கள் பாடசாலைகளுக்கு அருகில் சீருடை மற்றும் சிவில் உடைகளில் பொலிஸாரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலர், பொரளை பகுதியிலுள்ள பெண்கள் பாடசாலையில் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

அத்துடன், அங்குள்ள மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பீதியுறும் வண்ணம் செயற்பட்டுள்ளதோடு, பாதுகாப்பு ஊழியர் ஒருவரையும் இவர்கள் தாக்கியுள்ள சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கிரிக்கெட் போட்டிகளின் நிமித்தம் வீதிகளில் தேவையற்ற வகையில் கூடும் மாணவர்களுக்கு எதிராகவும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts