கொழும்பிலிருந்து பேருந்தில் யாழ் வந்த தென்னிலங்கை வாசிக்கு கொரோனா!!

கொழும்பிலிருந்து பேருந்தில் யாழ்ப்பாணம் வந்த தென்னிலங்கை வாசியொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று (27) யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் Covid-19 பரிசோதனையில் கொரோனா நோயாளி ஆக இனம் காணப்பட்டவர்களில், யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட தென் பகுதியை சேர்ந்த நபரும் உள்ளடங்குவாதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த நபர், நயினாதீவு செல்வதற்காக கொழும்பிலிருந்து இ.போ.ச பேருந்தில் யாழ்ப்பாணம் வந்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் வந்த பின்னர் கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையில் பரிசோதனைக்காக சென்ற நிலையலேயே தொற்று உறுதியானது.

இந்த நபர் கடந்த 24ஆம் திகதி இரவு கொழும்பில் இருந்து இ.போ.ச பேருந்தில் வவுனியா வந்துள்ளார். வவுனியா பேருந்து நிலையத்தில் இறங்கி, யாழ்ப்பாணம் வந்த தனியார் பேருந்தில் பயணித்து யாழ் நகரத்தை 25ஆம் திகதி அதிகாலை வந்தடைந்தார்.

யாழ்ப்பாணம் வந்ததும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அன்றைய தினமே, காலை 9 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு பரிசோதனைக்கு சென்றார்.

அங்கு தனிமைப்படுத்தல் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு கொரோனா தொற்று உறுதியானது.

Related Posts