கொல்லங்கலட்டிக்கு மின் விநியோக திட்டம்

Kollankaladdi_elec4யாழ் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கொல்லங்கலட்டி பிரதேசத்திற்கான மின் விநியோகத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பபழை பிரதேச செயலர் சிறிமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகிழவில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டு மின் விநியோகத்தை ஆரம்பித்து வைத்தனர்.

வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 4 மில்லியன் ரூபா செலவில் இந்த விநியோகத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட பிரதம மின் பொறியியலாளர் ஞானகணேசன், வடக்கின் வடசந்தம் மின் விநியோகத் திட்டப் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts