Ad Widget

கொலை வழக்கில் எட்டு பொலிஸாரை கைது செய்ய உத்தரவு

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொட ர்பாக குற்றம் சாட்டப்பட்ட 8 பொலிஸாரை கைது செய்து, வழக்கு தொடர சட்டா மா அதிபர் திணைக்களம் பணித்துள்ளது.

யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சார்பாக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த பிர தான பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றில் இதனை கூறியுள்ளார்.

யாழ். புன்னாலைகட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு நேற்றய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சார்பாக மன்றில்முன்னிலையாகியிருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் சட்ட மா அதிபரால் தமக்கு கிடைக்கப்பட்ட அறிவுறுத்தலை மன்றில் முன்வைத்திருந்தார்.

இதன்பிரகாரம் குறித்த விடயம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட எண்மரையும் கைது செய்து அவர்களுக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றிலும் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றிலும் வழக்கு தொடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மன்றில் தெரிவித்தார்.

குறிப்பாக எண்மரில் ஐவருக்கு எதிராக கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் கொலை குற்றச்சாட்டு தொடர்பான வழக்கும் தாக்கல் செய்யவும் மற்றும் எண்மருக்கு எதிராக சித்திரவதை குற்றச்சாட்டு தொடர்பில் யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவும் சட்ட மா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இவ்வழக்கு விசாரணையை எதிர்வரும் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Posts