கொலை செய்யப்பட்ட மாணவி தொடர்பில் இதுவரை எவரும் கைதாகவில்லை

வவுனியாவில் கடந்த 16ஆம் திகதி வன்புணர்வின் பின் கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி க.ஹரிஸ்ணவி (வயது 13) தொடர்பில் பொலிஸார் நான்கு குழுக்களை அமைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதும் இதுவரை எவரும் கைதாகவில்லை என தெரியவருகிறது.

சந்தேகத்தின் பெயரில் பலரிடமும் வாக்குமூலங்களை பொலிஸார் பெற்றுள்ள போதும் எவரும் கைது செய்யப்படவில்லை.

ஆரம்பித்தில் இக்கொலை தொடர்பிலான பல தடயங்களை பொலிஸார் பெற்றுக் கொள்ள தவறியுள்ளதாகவும் அறியமுடிகிறது.

குறிப்பாக, கடந்த 16 ஆம் திகதி மாணவி மரணம் அடைந்த போதும் 18ஆம் திகதியே பிரேத பரிசோதனையின் பின் சடலம் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன் பின்னரே பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியமையால் அதற்கு முன்னரே வீட்டில் இருந்த பல தடயங்கள் மரணச் சடங்குக்கு வந்தவர்களால் தவறுதலாக அழிக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts