Ad Widget

கொலைச் சந்தேகநபர்கள் இருவர் விடுதலை

பெண்ணொருவரைக் கொலை செய்த வழக்கில் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்ட இருவரும் நிரபராதிகள் என யாழ்.மேல் நீதிமன்றம், நேற்று செவ்வாய்க்கிழமை (01) விடுதலை செய்தது.

கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி அச்சுவேலி பகுதியில் தவீந்திரராஸ் கலைச்செல்வி என்பவரை கொலை செய்தனர் என்ற சந்தேகத்தின் பேரில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் மூத்த சகோதரன் தவீந்திரராஸ் கிருசாந்தன், பெண்ணின் தந்தை தங்கராசா தவீந்திரராஸ் ஆகிய இருவரும் சந்தேகநபர்களாக அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் தான் இந்தக் கொலையை செய்தார்கள் என்பது வழக்குத் தொடருநர்களின் சாட்சியங்கள் ஊடாக நிரூபிக்கப்படாமையால் இவர்களை சுற்றவாளிகளாக கருதி நீதிபதி மா.இளஞ்செழியன் விடுதலை செய்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, நடைபெற்று வந்த இந்த வழக்கு கடந்த 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்.மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மேல் நீதிமன்றத்தில் தவணை முறையில் நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது.

Related Posts