கொறோனா வைரஸ் விழிப்பணர்வு செய்ய முற்பட்ட வேளையில் வைத்தியர் மீது தாக்குதல் றியோ முன்பாக சம்பவம்.

சுகாதார வைத்திய அதிகாரி, ஊர்காவற்துறை, வைத்திய கலாநிதி.நந்தகுமார்  இன்று பிற்பகல் நல்லூர் றியோ ஐஸ் கிரீம் விற்பனை நிலையத்தில் கொறொனா வைரஸ் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த முற்பட்டபோது றியோ விற்பனை நிலைய ஊழியர்கள் உட்பட்ட வேறு சிலரால் கல்லுகளால் தாக்கப்பட்டுள்ளார் இதன்போது வைத்தியரின் நண்பரும் தாக்கப்பட்டுள்ளார்  இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது .இது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

வைத்தியர் மீதான தாக்குதலை  அரச வைத்தியதிகாரிகள் சங்கம் யாழ் பிராந்திய பணிமனை பிரிவு வன்மையாகக் கண்டித்துள்ளது

Related Posts