கொரோனோ வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் நாடளாவிய ரீதியில் 29 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி!!

கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறிகளுடன் நாடளாவிய ரீதியில் 29 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்கள் இலங்கையில் உள்ள 15 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அப்பிரிவு, அவர்களில் 08 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.

தொற்று நோய் தடுப்பு பிரிவினர் வெளியிட்டுள்ள அறிக்கைலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கொடை தொற்று நோயியல் வைத்தியசாலையில் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, நான்கு பேர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகை ஆக்கிரமித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தையும் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts