கொரோனா வைரஸ் தொற்று: ரஷ்யாவின் தடுப்பூசியை போட திட்டமிட்டுள்ள இலங்கை!!

எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ரஷ்யாவின் தடுப்பூசியை போட திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான மாஸ்கோ தூதுவர் Meegahalande Durage Lamawansa தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக Meegahalande Durage Lamawansa மேலும் கூறியுள்ளதாவது, “நான் இலங்கையிலிருந்து மாஸ்கோ வந்தவுடன், எதிர்காலத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பெற தயாராக இருக்கிறேன்.

இந்த தடுப்பூசியானது தற்போது, 3 ஆம் கட்ட சோதனைகள் வழியாக செல்கிறது. அதில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்’ என்று அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு முதல் முதலில் தடுப்பூசியை பதிவு செய்த நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது.

குறித்த நாடு தற்போது, 20 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் ஒரு பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்குவதற்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது.

ரஷ்ய சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, ஸ்பூட்னிக் வி பாதுகாப்பானது மற்றும் வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் திறன் கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகளின் தேவையான 3 ஆம் கட்ட தடுப்பூசியை இன்னும் முடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts