கொரோனா வைரஸ் தொற்று : நாளை முதல் சகல பாடசாலைகளுக்கும் பூட்டு??

நாளை முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவித்தல் பிற்பகல் 2 மணிக்கு வௌியிடப்படும் என கல்வி அமைச்சின் நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts