கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்க்கவும்- சுகாதார பிரிவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்கள், அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள் என சுகாதார பிரிவு வலியுறுத்தியுள்ளது.

சமீபகாலமாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களில் 30 வயதிற்கு குறைவானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், நேற்று (வெள்ளிக்கிழமை) பதிவான கொரோனா மரணங்களில் 5 பேர், 30 வயதுக்கு குறைவானவர்கள் என அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் போதுமானளவு ஓய்வெடுக்க வேண்டியது அவசியம் என விசேட வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன வலியுறுத்தியுள்ளார்.

Related Posts