கொரோனா வைரஸ் – சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 170 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் மற்றும் அச்சம் காரணமாக நாடளாவிய ரீதியாகவுள்ள வைத்தியசாலைகளில் 170 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

எனினும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பொதுமக்கள் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை என தொற்று நோயியல் பிரிவின் பிரதான வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பாக சுகாதார அமைச்சின் சகல பிரிவுகளும் அவதானத்துடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்திவரும் கொரோனோ வைரஸ் காரணமாக இதுவரையில், சீனாவில் மாத்திரம் 1011 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

உலகம் முழுவதும் இந்தியா, இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts