கொரோனா வைரஸ் அதிகளவில் பரவினாலும் பாடசாலைகள் மூடப்படாது

நாட்டில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவினாலும் பாடசாலைகள் மூடப்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உயர்தரப் பரீட்சை நவம்பர் 28ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்திற்கான சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரல் 2 ஆம் திகதிக்குப் பின்னர் நடைபெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, 2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன.

இதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 30ஆம் திகதிக்குள் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related Posts