கொரோனா வைரஸின் நான்காவது அலையை எதிர்கொள்ள பொதுமக்கள் தயாராக இல்லை!!

இலங்கையில் கொரோனா வைரஸின் நான்காவது அலையை எதிர்கொள்ள பொதுமக்கள் முழுமையாக தயாராக இல்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் வைரஸின் மற்றொரு அலை உருவாக வாய்ப்புள்ளது என சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்தார்.

இலங்கை விழிப்புடன் இருப்பதாகவும் உலக முன்னேற்றங்களை கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

வைரஸை ஒழிக்க முடியாது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என்றும் கொரோனானவுடன் வாழும் சகாப்தத்தில் இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் விளக்கினார்.

மேலும் தடுப்பூசி போடுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்ட அவர், தடுப்பூசி போடப்பட்டதால் சுகாதார வழிகாட்டுதல்களை அவர்கள் புறக்கணிக்கக்கூடாது என்றும் கூறினார்.

தடுப்பூசிகளின் செயற்திறன் இன்னும் முழுமையாக தீர்மானிக்கப்படாததால், பொதுமக்கள் தடுப்பூசிகளை மட்டுமே நம்ப முடியாது என்றும் அவர் கூறினார்.

வைரஸ் தொடர்ந்து பிறழ்வதால், மக்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டவர்கள் என்று சான்றளிக்க முடியாது என்றும் பாலசூரிய கூறினார்.

தடுப்பூசி இறப்பு விகிதத்தையும் நோயின் தீவிரத்தையும் குறைக்கும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள் என்றும் ஆனால், பரவுவதற்கான ஆபத்து இன்னும் உள்ளது என்றும் அவர் கூறினார்.

பயணக் கட்டுப்பாட்டை நாடு தளர்த்தியுள்ள இந்நேரத்தில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது அவசியம் என்றும் பாலசூரிய கூறினார்.

Related Posts