கொரோனா வைரஸினால் இன்று எவரும் பாதிக்கப்படவில்லை – சுகாதார மேம்பாட்டு பணியகம்

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இன்று (சனிக்கிழமை) இதுவரையான காலப்பகுதியில் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் நேற்று மட்டும் 13 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்திருந்தது.

இந்நிலையில் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளதுடன் 245 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளனர் என்றும் அறிவித்துள்ளது.

Related Posts