கொரோனா வைரஸ் குறித்த செய்திகள், பாதிப்புகள், இழப்புகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இதுவும் ஒருவித பாதிப்பே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் திடமான மனதுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என மனோ தத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.
அந்த பரிந்துரைகள் பினவருமாறு:
கொரோனா அச்சத்தில் இருந்து வெளியேறி, கொரோனா பரவல் காலத்திலும் மனதை தேவையற்ற பயத்தில் இருந்து மீள உளவியலாளர்கள் சில பரிந்துரைகளை அளித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் குறித்த செய்திகள், பாதிப்புகள், இழப்புகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இதுவும் ஒருவித பாதிப்பே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் திடமான மனதுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என மனோ தத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.
கொரோனா அச்சத்தில் இருந்து வெளியேறி, கொரோனா பரவல் காலத்திலும் மனதை தேவையற்ற பயத்தில் இருந்து மீள உளவியலாளர்கள் சில பரிந்துரைகளை அளிக்கின்றனர். அவற்றை கீழே காணலாம்.
* முடிந்தால்இ வீட்டில் இனிமையான இசையைக் கேளுங்கள். குழந்தைகளை மகிழ்விக்க, கதைகள் சொல்வது, அவர்களுடன் பலகை விளையாட்டு விளையாடுவது, எதிர்கால திட்டங்களை பகிர்வது என உங்களை ஈடுபடுத்துங்கள்.
* வீட்டில் அனைவரும் அடிக்கடி கைகளை கழுவுவது போன்ற ஒழுக்கத்தை பேணுங்கள்.
* உங்கள் நேர்மறையான மனநிலை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க உதவும், அதே நேரத்தில் எதிர்மறை எண்ணங்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மனச்சோர்வடையச் செய்து வைரஸ்களுக்கு எதிராக பலவீனப்படுத்துகின்றன.
* மிக முக்கியமாக, இதுவும் கடந்து போகும், நாம் பாதுகாப்பாக இருப்போம் என்று உறுதியாக நம்புங்கள்.